செங்கல்பட்டில் பரபரப்பு.. கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்!
corona
tamilnadu
patentescape
By Irumporai
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில் தமிழக குடிசை மாற்று வாரியம் சார்பில் 2100 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இதில் 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதில் வேலை பார்த்த 33 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்ட வட மாநில தொழிலாளர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு இதனைப் பார்த்ததுஅனுப்ப இருந்தனர்.
இதில் 33 பேரில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 8 வட மாநில தொழிலாளர்கள் தப்பி ஓடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.