சென்னையில் கொரோனா நோயாளி தற்கொலை - மருத்துவர்கள் அதிர்ச்சி
Corona
Suicide
Chennai
By mohanelango
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் கொரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மருத்துவமனையின் 3வது மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக கேளம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
போலீசார் விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் சென்னை அஸ்தினாபுரத்தை சேர்ந்த 51 வயது ஆண் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 16ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அச்சத்தால் தற்கொலையா என விசாரணை நடைபெற்று வருகிறது.
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan