இந்தியாவில் 6 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று
COVID-19
By Fathima
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது.
டெல்லி, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் புதிய வகை கொரோனா தொற்று பரவத்தொடங்கியுள்ளது.
48 மணிநேரத்தில் மட்டும் 769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் கேரளா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
இது தீவிரமில்லாத ஒன்று என்பதால் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொது இடங்களில் பயணிக்கும் பொழுது முதியவர்கள், இணைநோய் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் முகக் கவசம் அணியவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
