இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட கொரோனா நோயாளி: வைரலாகும் காணொளி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் காணொளி தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் பலமு மருத்துவ கல்லூரியில் ஸ்டெச்சர் இல்லாததால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவரை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனையிலிருந்து அழைத்து சென்ற காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்த காணொளி பதிவில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் இடையில் கொரோனா நோயாளி அமர்ந்து சென்றது பதிவாகியுள்ளது. அதுமட்டுமன்றி அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டாரா அல்லது வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாரா என்பதும் தெரியவில்லை.
— Niruban Chakkaravarthi M (@Niruban_be) April 27, 2021