தமிழகத்தில் 35 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
corona
tamilnadu
By Irumporai
தமிழகத்தில் ஒரே நாளில் 35 ஆயிரத்து 579 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு முப்பதாயிரத்தைக் கடந்த நிலையில் இன்று 35,579 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் இதுவரை 17 லட்சத்து 34 ஆயிரத்து 804 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
. இப்போது, 2 லட்சத்து 63 ஆயிரத்து 390 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 25 ஆயிரத்து 368 பேர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்
. இன்று ஒரே நாளில் 397 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது.