மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் மகா உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு

vaccine corona increase ratio
By Praveen Apr 24, 2021 09:00 AM GMT
Report

மகாராஷ்டிராவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66, 836 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 773 ஆகவும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மிக மோசமாக முதலிடத்தில் இருக்கிறது மகாராஷ்டிரா. மகாராஷ்டிராவில் வெள்ளிக்கிழமையன்று மட்டும் 66,836 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அத்துடன் கொரோனாவால் 773 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று மட்டும் 74,045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டும் உள்ளனர். மகாராஷ்டிராவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,61,676. இம்மாநிலத்தில் மொத்த கொரோனா உயிரிழப்புகள் 63,252 ஆகும். மகாராஷ்டிராவில் தற்போது 6,91,851 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புனேவில்தான் மிக அதிகபட்சமாக 9,863 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இங்கு 24 மணிநேரத்தில் 30 பேர் மரணித்துள்ளனர். நாக்பூரில் 7970 பேரும் மும்பையில் 7221 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் வெள்ளியன்று மட்டும் 72 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.