இந்தியாவில் உருவான கொரோனா பிரிட்டன் வகையை விட ஆபத்தானது - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிட்டனில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது. இது மிகவும் வேகமாக பரவியது இதனால் இறப்பு விகிதமும் அதிகமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் கண்கானிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டன. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், பீகார், டெல்லி, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
இந்நிலையில் புனேயில் உள்ள தேசிய வைராலஜி கழகம், பிரிட்டனின் உருமாறிய கொரோனா வகை மாதிரி இந்தியாவில் பரவும் கொரோனாவை விட அதிகமாக ஒட்டிப் பரவக்கூடியதல்ல என்று கூறியுள்ளது.
அதாவது இந்திய வகை கொரோனா, பிரிட்டனில் உருமாறிய கொரோனாவை விடவும் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்கிற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.