தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா - பிரபலங்களின் படப்பிட்டிப்பு ரத்து
கொரோனா தொற்று பரவல் காரணமாக நடிகர்கள், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனாலும் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 3 லட்சத்து 23 ஆயிரத்து 452 போ பாதிக்கப்பட்டுள்ளனா்.
கொரோனா தொற்றினால் சென்னையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,661 ஆக உள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக நடிகர்கள், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.
அதிகளவில் பணியாளர்களை கொண்டு படப்பிடிப்புகளை நடத்த முடியாத சூழல் நிலவுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.