இரவு நேர ஊரடங்கில் வெளியில் சுற்றிய 22 வாகனங்கள் பறிமுதல்

corona lockdown night vehicle surrender
By Praveen Apr 29, 2021 09:03 PM GMT
Report

கடலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 22 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் இறப்பும் அதிகரிதுள்ளது. இவற்றைத் தடுக்க தமிழக அரசு, இரவு 10:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4:00 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழுநேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது.

அதன்படி கடலுார் மாவட்டத்தில் இரவு நேரங்களில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து சோதனை செய்து வருகின்றனர்.அதில், அவசியமின்றி வாகனங்களில் வருவோர் மீது வழக்குப் பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு 36 பேர் மீது வழக்குப்பதிந்து, 22 பேரிடம் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.