கடந்த 7 நாட்களாக 180 மாவட்டங்களில் கொரோனா தொற்று பதிவாகவில்லை - மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ் வர்தன்

india corona harsh vardhan
By Praveen May 08, 2021 02:11 PM GMT
Report

 கடந்த 7 நாட்களாக 180 மாவட்டங்களில் கொரோனா தொற்று பதிவாகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் கடந்த 7 நாட்களாக 180 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4,01,078 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் 3வது நாளாக தொடர்ந்து 4 லட்சம் பேருக்கு கூடுதலான தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் ஹர்ஷ் வர்தன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் கடந்த 7 நாட்களாக 180 மாவட்டங்களில், 14 நாட்களாக 18 மாவட்டங்களில், 21 நாட்களாக 54 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.