கொரோனா பரவல்: குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து
year
january
nationalday
By Jon
கொரோனா பரவல் காரணமாக சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் குடியரசுத் தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், குடியரசுத் தின விழாவின் போது சுதந்திர போராட்ட வீரர்களுக்கு கௌரவம் அளிக்கப்படும்.
அதற்கு மாறாக, சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கேச் சென்று ஆட்சியர்கள் உரிய மரியாதை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவைப் பார்க்க பொதுமக்கள் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.