2 மாதத்திற்கு 5 கிலோ தானியங்கள் இலவசம் - பிரதமர் மோடி அறிவிப்பு

corona modi issue cerals
By Praveen Apr 23, 2021 11:13 AM GMT
Report

மே மற்றும் ஜூன் மாதத்தில் 5 கிலோ தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும் என இந்தியா பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. மேலும் கடந்த வருடத்தைப் போல இந்த வருடமும் மார்ச் மாதம் முதல் கொரோனாவின் தாக்கம் அதிதீவிரமாகியுள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தொழிலாளர்கள் மீண்டும் வேலை இழப்பை சந்தித்து வருகின்றனர். மேலும் இந்த சூழலில் மக்களின் வறுமையைப் போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து இந்தியா பிரதமர் மோடி அவர்கள் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்க தற்போது உத்தரவிட்டுள்ளார்.