இறுதியாண்டு மருத்துவ மாணவர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்த உள்ளதாக மத்திய அரசு தகவல்

india corona final year medical students
By Praveen May 02, 2021 10:26 AM GMT
Report

 இறுதியாண்டு மருத்துவமாணவர்கள் கொரோனா பணியில் ஈடுபடுத்தப்போவதாக மத்திய அரசு முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெரும் நபர்களுக்கு ஆக்சிஜன் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா மருத்துவப்பணியில் ஆட்கள் அதிகப்படியானோர் தேவைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்காக மருத்துவப்படிப்பின் இறுதியாண்டு மாணவர்களை மத்திய அரசு பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையானது, இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் இறுதியாண்டு மருத்துவ மாணவர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டத்திற்கு பின்னர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டில் COVID-19 தொற்றுநோயை திறம்பட நிர்வகிப்பதற்கான மனித வளங்களை மேம்படுத்துவதற்கான வழிகளை பிரதமர் ஆய்வு செய்தார். மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், சுகாதார செயலாளர் மற்றும் பிற அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

'கூட்டத்தில், கோவிட் பணியில் சேர மாணவர்களை ஊக்குவிப்பதற்கும் மருத்துவ மற்றும் நர்சிங் படிப்புகளில் தேர்ச்சி பெறுவதற்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, அவை குறித்த விவரங்கள் நாளை வெளிவரும்' என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 'நீட் தாமதப்படுத்துதல் மற்றும் கோவிட் பணியில் சேர MBBS பாஸ்-அவுட்களை ஊக்குவித்தல் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ள.

கோவிட் பணியில் இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் நர்சிங் மாணவர்களின் சேவைகளைப் பயன்படுத்துவதும் அடங்கும். கோவிட் பணியை செய்யும் அந்த மருத்துவ பணியாளர்களுக்கு அரசாங்கத்தில் முன்னுரிமை வழங்கப்படும், ஆட்சேர்ப்பு மற்றும் நிதி ஊக்கத்தொகை வழங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.