நாளை மறுநாள் முதல் யாரும் மாஸ்க் அணிய அவசியம் இல்லை - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு - மக்கள் மகிழ்ச்சி
கடந்த 2019ம் ஆண்டு சீனா உஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பல உலக நாடுகளில் பரவி கோடிக்கணக்கான மக்களின் உயிர்களை பறித்தது.
கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி மக்கள் தவித்து வந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
உலக நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவியபோது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், உலக மக்கள் வீட்டில் முடங்கினர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கியபோது, மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்தியாவை பொறுத்தவரை ஊரடங்கு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற வழிமுறைகளை கையாளுமாறு அறிவுறுத்தப்பட்டு வந்தது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
இதனையடுத்து, மகாராஷ்டிராவில் நாளை மறுநாள் முதல் முகக்கவசம் அணிய தேவையில்லை என்றும் கொரோனா பரவல் தடுக்க விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போது மகாராஷ்டிராவில் இன்று 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.