கொரோனா ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட சந்தையால் கொரோனா பரவும் அச்சம்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியில் இன்று சனிக்கிழமை வார சந்தை கொரோனா விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியின்றி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் பெரும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா பதிப்பு இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூன் 7 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியில் இன்று சனிக்கிழமை வார சந்தை நடைபெறுவது வழக்கம் என்பதால் ஆடு, மாடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளது.
காலை முதலே சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அதிகமானதால் கொரோனா பரவும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
மக்கள் கூட்டம் அதிகளவில் கூடக்கூடாது என்று கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் கந்திலியில் சந்தையில் இன்று ஆடுகள் மற்றும் கோழிகளை வாங்க அதிகளவு வியாபாரிகள் ஒன்று திரண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
முழு ஊரடங்கு மீறி வாரச்சந்தை இயங்கி வருகிறது. இதனை காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது.