ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்று வேலூர் இறைச்சி கடையில் குவிந்த மக்கள்
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு என்பதால் வேலூரில் இறைச்சி கடையில் பொதுமக்கள் குவிந்த வண்ணம் காணப்பட்டனர்.
கொரானாவின் இரண்டாவது அலையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் பொது மக்களைப் பாதுகாக்கின்ற வகையில் பொதுமக்கள் வீடுகளிலேயே தனிமையில் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை முன்னிட்டு இறைச்சிக் கடைகளும் மூடி இருக்கும் என்பதால் பொதுமக்கள் நேற்று மாலை முதலே வேலூரில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் மற்றும் இறைச்சிகளை வாங்குவதற்கு வந்திருந்து தங்களுக்குத் தேவையான இறைச்சிகளை மீன் வகைகளை கொஞ்சம் கூட சமூக இடைவெளியை பின்பற்றாமல் முட்டிமோதி வாங்கிச் சென்றனர்.