தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 31 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் ஆண்கள் 23 பேரும், பெண்கள் 29 பேரும் உள்பட மொத்தம் 52 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 19 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து முக கவசம் அணியவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும்,
தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. இந்த கட்டுப்பாடு தளர்வுகள் இம்மாதம் இறுதி வரையில் நடைமுறையில் இருக்கும்.
இந்த சூழலில், முதலமைச்சர் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதன் அடிப்படையில் புதிய கட்டுப்பாடுகள் அல்லது தளர்வுகள் குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.