10 லட்சம் கொரோனா விதிமீறல் வழக்குகள் ரத்து - டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி அறிவிப்பு..!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின் போது கட்டுப்பாட்டை மீறியதாக போடப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில் வழக்குகளை திரும்பபெற டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அதிமுக ஆட்சியின் போது கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இ பாஸ் முறைகேடு,போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றங்களை தவிர அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் நலன் கருதி 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும் என காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு சென்னை தவிர அனைத்து மாவட்ட போலீசாருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.