தமிழகத்தில் ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு

case corona tamilnadu increases
By Praveen Apr 28, 2021 01:18 PM GMT
Report

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக ஒரே நாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 11,30,167 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4,764 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதுபோல இன்று மேலும் 98 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 13,826 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று மட்டும் 15,114 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 10,06,033 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 1,10,308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று 1,30,042 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் 2,23,78,247 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டள்ளது.