கொரோனா இல்லை என்று சொல்லும் நாள்தான் எனக்கு மகிழ்ச்சியான நாள்` - முதல்வர் ஸ்டாலின்

cm dmk stalin
By Irumporai May 21, 2021 05:36 PM GMT
Report

கொரோனா இல்லை என சொல்லும் நாளே தனக்கு மகிழ்ச்சியான நாள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மு.க ஸ்டாலின் கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள் என கூறினார்.

மேலும் தடுப்பூசியை பொருத்தவரை தமிழகம் கேட்டதை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை தடுப்பூசிகளை பெற மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம்' என்றார்.

ஊரடங்கு குறித்து பேசிய முதல்வர் நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பது பற்றி அறிவிக்கப்படும் என கூறினார்.

மீதமுள்ள நிவாரணத் தொகை ரூ 2000 ஜூன் 3 ஆம் தேதிக்குள் வழங்கப்படும்' என்றார்.