மீண்டும் பரவும் கொரோனா தொற்று..!! ஒரே நாளில் 230 பேர் பாதிப்பு..!!
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 230 பேருக்கு கொரானா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
கடந்த 2019-ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது. இதனால் உலகம் முழுவதும் 69 லட்சம் பேர் உயிரிழந்தனர்.மேலும் 69 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர் என்பதயு தற்போது குறிப்பிடவேண்டியதில்லை.
அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அதன் பாதிப்பு குறைந்த நிலையில் தற்போது சமீப காலமாக மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
230 பேருக்கு தொற்று
குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கேரளாவில் தொற்று எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது வரை 1091 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் தமிழக எல்லைப்பகுதிகளில் அச்சம் அதிகரித்துள்ளது.