கொரோனா நிவாரண நிதியாக ரூ.7.50 கோடி வழங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
இந்தியாவில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.7.50 கோடியை அளித்து உதவியுள்ளது ஐபிஎல் அணியான ராஜஸ்தான் அணி நிர்வாகம்.
இந்தியாவில் தற்போது கொரோனா நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோதாது என தற்போது நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை வேற ஏற்பட்டுள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேராவது ஒரு மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இந்தியாவில் நிலவி வரும் சூழலைக் கண்டு பல்வேறு தரப்பினர் உதவி புரிந்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக பிரதமா் நிவாரண நிதிக்கு ரூ.37 லட்சம் நன்கொடை அளித்துள்ளாா்.
இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக ரூ. 40 லட்சம் வழங்குகிறேன் என்று முன்னாள் ஆஸி. வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 7.50 கோடி வழங்குவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவித்துள்ளது.
இதையடுத்து இதர ஐபிஎல் அணிகளும் கொரோனா நிவாரண நிதி குறித்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.