இப்போ கொரோனா குறைவாகத்தான் இருக்கு , ஆனால் இந்த இடங்கள் ? - ராதாகிருஷ்ணன் சொன்ன அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகரித்த கொரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது, இதனால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளும் அளித்துள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிப்பை பொறுத்தவரை தமிழகத்தில் நேற்று 1,21,828 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 10 ஆயிரத்து 882ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இதுவரை 37 ஆயிரத்து 759 பேர் தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் :
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்துள்ளதாக கூறினார், அதே சமயம் தேனி, கிருஷ்ணகிரி, கோயம்பத்துர் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகம் உள்ளதாக கூறினார்.
மேலும், தமிழகத்தில் கொரோனா மே மாதம் இருந்த பரவல் இப்போது இல்லை எனவும் மாஸ்க் அணிவது, தனி நபர் இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற நோய் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிப்பதில்லை என கூறிய ராதாகிருஷ்ணன் .
கொரோனா 3-ம் அலையில் உயிரிழப்பு குறைந்ததற்கு காரணம், பலர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதுதான் காரணம் எனக் கூறினார்.