தமிழகத்தில் 1,600 கடந்த கொரோனா பாதிப்பு: தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று

covid india people tamilnadu
By Jon Mar 25, 2021 01:19 PM GMT
Report

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில் தமிழகத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 1,500ஐ கடந்துள்ளது. தமிழகம் முழுவதும் 1,636 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் 633 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 9,746 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 80,634 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.