பள்ளிகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: அதிகாரிகளுடன் அவரச ஆலோசனை
பள்ளிகளில் பாதுகாப்பு குறித்தும், மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக பள்ளி கல்விதுறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சார்பில் 2,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் விதமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதனை தொடக்கி வைத்த பின் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், சென்னையில் 350 மையங்கள் மூலமாக தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், இதுவரை 4.50 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கூறினார். இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு முகாமில் 10 மருத்துவகுழுகள், ஆம்புலன்ஸ், படுக்கை வசதியும் என அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 2,500 வரை தடுப்பூசி நேரு அரங்கத்தில் போட நடவடிக்கை எடுத்துள்ளோம், இனி வரும் சனிக்கிழமை தோறும் இந்த மையத்தில் தடுப்பூசி போடலாம். சென்னையில் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருகிறோம், அடுத்த 45 நாட்களில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயத்துள்ளதாக கூறிய அவர் ஜெர்மன், ரஷ்யா போன்ற இடத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்றார்.
வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஆட்டோ மற்றும் கார் டிரைவர், காவலாளிகள் போன்றோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளோம் இதன் மூலம் பரவலை தடுக்க முடியும். வங்கி ஊழியர்கள் சங்கம் தடுப்பூசி போட கேட்டுள்ளனர், பரிசீலனையில் இருக்கிறதாகவும் கபசுர குடிநீர் கொடுக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என்றார்.
அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலத்தில் தொற்று அதிகமாகி உள்ளதாக கூறிய அவர் பள்ளிகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அந்த குறிப்பிட்ட பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பள்ளிகல்வி துறை மற்றும் சுகாதரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறாத தெரிவித்த அவர் உயிர் பாதுகாப்பு தான் முக்கியம் இன்னும் 2 நாளில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றார்.