பில்கேட்ஸூக்கு கொரோனா உறுதி... தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்விட்டரில் அறிவிப்பு

COVID-19 Bill Gates
By Petchi Avudaiappan May 11, 2022 08:35 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸூக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா தொற்றுக்கு ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இன்றளவும் இந்த தொற்று உருமாற்றம் அடைந்து பரவி வரும் நிலையில் தடுப்பூசி ஒன்றே தீர்வாக அமைகிறது. 

இதனிடையே மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோயைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு குறிப்பாக தடுப்பூசிகள் மற்றும் கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்குவதற்கு அவர் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். 

மேலும் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பில்கேட்ஸ்,  எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.நான் லேசான அறிகுறிகளை அனுபவித்து வருகிறேன்.நான் மீண்டும் ஆரோக்கியமாக இருக்கும் வரை தனிமைப்படுத்துவதன் மூலம் நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்றுகிறேன்.நான் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி பெற்ற அதிர்ஷ்டசாலி மற்றும் சிறந்த மருத்துவ பராமரிப்பை பெற்றுள்ளேன்” என கூறியுள்ளார்.