சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை..!
சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகையை கடும் இன்னலுக்கு உள்ளாக்கிய கொரோனா தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் இந்த தொற்று உலகம் முழுவதும் பரவி உலகையே ஒரு உலுக்கு உலுக்கியது.

இந்நிலையில் படிப்படியாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று குறைய தொடங்கியது. இதனிடையே மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால் அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஷாங்காய் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போது அந்த ஊரடங்கு தற்போது வரை முழுமையாக நீக்கப்படவில்லை. தலைநகர் பிஜிங்கில் சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இதனால் அங்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.அந்நகரில் தினமும் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில்,கொரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டுமே பேருந்து, ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
பிஜிங்கின் 190 பஸ் வழித்தடங்கள், 54 மெட்ரோ ரெயில் நிலையங்களில் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, என தெரிவித்தார்.
பாங்ஷான் மாவட்டத்தில் பேருந்து, மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாங்ஷான் மாவட்டத்தில் 13 லட்சம் பேர் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் அங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.