மகாராஷ்டிரா மாநில மந்திரிக்கு 2 வது முறையாக கொரோனா தொற்று
மகாராஷ்டிரா மாநில மந்திரியான தனஞ்ஜெய் முண்டேவுக்கு 2வது முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 28,699 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்து 33 ஆயிரத்து 026 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சமூக நீதி துறை மந்திரி தனஞ்ஜெய் முண்டேவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், இது இரண்டாவது முறையாகும், நான் கொரோனாவுக்கான பரிசோதனை செய்தேன். அதில் எனக்கு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.