Sunday, Jul 6, 2025

இந்தியாவில் சற்று குறைந்தது கொரோனா தொற்று..!

COVID-19
By Thahir 3 years ago
Report

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சற்று குறைந்தது கொரோனா தொற்று 

அதில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 19,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,793 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சற்று  குறைந்தது கொரோனா தொற்று..! | Corona Infection Is Slightly Less In India

இந்தியாவில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தமாக 4,41,26,994 ஆக அதிகரித்துள்ளது .

மேலும் மத்திய அரசு அளித்துள்ள தகவலின் படி கடந்த 24 மணி நேரத்தில் 49 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் விகிதம் 98.50 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.