தமிழகத்தில் ஒரே பள்ளியில் 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று - பள்ளி மூடல்..!
தேனி அருகே ஒரே பள்ளியில் 33 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பள்ளி மூடப்பட்டது.
அதிகரிக்கும் கொரோனா
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகாரித்து வருகிறது.
குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும்,
கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
33 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா
இந்த நிலையில், தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 33 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பள்ளி மூடப்பட்டு அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.