ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவருக்கு கொரோனா தொற்று: தடுப்பூசி செலுத்திய பிறகும் தொற்று

covid19 india Mohan Bhagwat rss
By Jon Apr 11, 2021 05:43 PM GMT
Report

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்திற்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசுபல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில்,பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட அரசியல் பிரபலங்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர்.

அந்த வகையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள செய்தியில், கொரோனா அறிகுறியுடன் மோகன் பகவத் நாக்பூரில் உள்ள கிங்ஸ்வே மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த மார்ச் 7-ம் தேதியன்று மோகன் பகவத் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 வயதாகும் மோகன் பகவத்திற்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.