இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு கொரோனா தொற்று
தமிழ் திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திரைப் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பழம்பெரும் இயக்குனரான எஸ்.பி.முத்துராமன் கொரோனா அறிகுறியுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது. தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு இருந்தாலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களை வைத்து கிட்டத்தட்ட 75 படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.