தாய்லாந்து, மியான்மர், இங்கிலாந்தில் இருந்த இந்தியா வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இங்கிலாந்து, தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பீகார் வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் பரவும் கொரோனா தொற்று
சீனாவில் பிஎப் 7 என்ற புதிய வகை கொரோனா தாக்கம் பெரும் உச்சம் அடைந்த நிலையில், கொரோனா தொற்று அந்நாட்டில் பெரும் உச்சம் அடைந்துள்ள நிலையில் மக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தீவிரமான கொரோன பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
இந்தியா வந்த 5 பேருக் தொற்று
பீகாரின் புத்த கயாவில் 5 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள 4 பேரில் இருவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தலா ஒருவர் மியான்மர் மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீகாரில் நடைபெறும் காலச் சக்கர பூஜைக்கு வந்த 32 வெளிநாட்டவர்களுக்கு இருமல், சளி இருப்பது தெரிவந்ததையடுத்து, மாவட்ட நீதிபதி தியாகராஜன் எஸ்.எம். தலைமையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.
பீகாரில் உள்ள புத்த கயாவில ஒவ்வொரு ஆண்டும் காலச் சக்ர பூஜை நடத்தப்படுகிறது இதில் உலகம் முழுவதும் இருந்து மக்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டு காலச் சக்கர பூஜை வருகிற டிசம்பர் 29 முதல் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க திபெத்திய புத்த மதகுரு தலாய்லாமா புத்தகயா நகருக்கு வருகை தந்துள்ளார்.