திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிற நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தான் தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது.
அதற்கான பிரச்சாரங்களில் பெரும் அளவில் கூட்டம் கூடியதால் இனிவரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டிருந்தது. தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் தற்போது திமுக பொதுச் செயலாளர் துரை முருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோட்டூர்புரத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் அவர் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்