தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா : எம்ஐடியில் மேலும் 60 மாணவர்களுக்கு கொரோனா உறுதி

corona tamilnadu chrompet
By Irumporai Jan 07, 2022 09:31 AM GMT
Report

சென்னை:குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்வி நிறுவனத்தில், ஏற்கனவே 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பல மடங்கு அதிகரித்து வருகிறது.குறிப்பாக,தமிழகத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 44 பேர் என மொத்தம் 6,983 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்தது.

அதிகபட்சமாக,சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 3,759 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில்,சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்வி நிறுவனத்தில் மேலும் 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி,எம்ஐடியில் மொத்தம் 141 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. குறிப்பாக,தொற்று பாதித்த மாணவர்களில் 90% பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் தென்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.