அதிகரிக்கும் கொரோனா தொற்று - பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு!
இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 700க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இதனையடுத்து, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது.
அதன்படி ஏப்ரல் 30 வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இச்சூழலில் டெல்லியுள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூட டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி பள்ளிகள் மூடப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கட்ந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 437 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.