தமிழகத்தில் புதிதாக 5,127 பேருக்கு கொரோனா -91 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது, அந்த வகையில் தமிழ்க சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்5127 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,127 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,65,874 பேர் ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 308 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 91 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,290 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 7,159 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 23,90,783 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
