கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் கொரோனா: இன்று 26 பேர் பலி!
தமிழ்நாட்டில் இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்:
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,59,597 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 26 பேர் இன்று உயிரிழந்தனர்.
மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 34,076 ஆக உயர்ந்தது. தமிழ்நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 2,178 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர்.
இதுவரை 25,04,805 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 20,716 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட வாரியாக கோவையில் 246, சென்னையில் 204, ஈரோட்டில் 165, தஞ்சையில் 124, செங்கல்பட்டில் 122 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மற்ற மாவட்டங்களில் 100 க்கும் கீழாகவே பாதிப்பு பதிவாகியுள்ளது.