தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு!
corona
tamilnadu
By Irumporai
தமிழ்நாட்டில் புதிதாக 1,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள் ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று 1,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மட்டும் கொரோனா தொற்றில் இருந்து 2 ஆயிரத்து 516 பேர் குணமடைந்துள்ளனர்.
. அதே நேரம் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளது.
அதே சம்யம் இன்று. சென்னையில் உயிரிழப்பில்லை. கோவையில் 177 பேருக்கும் ஈரோட்டில் 135 பேருக்கும் சேலத்தில் 110 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.