ஊரடங்கு பலன் ...குறையும் கொரோனா பாதிப்பு!
தமிழ்நாட்டில் புதிதாக 8,183 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 29 நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இன்று மட்டும் 18 ஆயிரத்து 232 பேர் குண மடைந்துள்ளனர் அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 180 பேர் உயிரிழந்துள்ளனர்
சென்னையில் புதிதாக 468 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 31 பேர் உயிரிழந்துள்ளனர். 1513 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஈரோட்டில் 933 பேருக்கும் திருப்பூரில் 489 பேருக்கும் சேலத்தில் 533 பேருக்கும் கோவையில் 1014 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.