தமிழகத்தில் ஊரடங்கினால் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்றானது, ஊரடங்கு காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் புதிதாக 15 ஆயிரத்து 759 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 24 ஆயிரத்தை கடந்துள்ளது
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 378 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 906ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். .