நடிகை ராதிகாவுக்கு கொரோனா தொற்று - கைதாவதில் சிக்கல்!

police jail kamal radhika mnm
By Jon Apr 07, 2021 04:51 PM GMT
Report

கடந்த 2014ம் ஆண்டு இது என்ன மாயம் பட தயாரிப்புக்காக ரேடியன்ஸ் நிறுவனத்திடமிருந்து மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் ரூ 1.5 கோடி கடன் வாங்கியிருந்தது. இந்த கடனை திரும்பி அளிக்கும்போது மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் காசோலையில் மோசடி செய்துள்ளது. மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருந்த நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா இருந்தனர்.

இந்த மோசடி சம்பந்தமாக இருவரும் சிக்கினார்கள். இதனையடுத்து, காசோலை மோசடி செய்ததாக சரத்குமார் ராதிகா மற்றும் பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு எதிராக ரேடியன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இதனையடுத்து, இந்த வழக்கிற்கு இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது.

செக் மோசடி வழக்கில் சிக்கிய ராதிகாவுக்கும் சரத்குமாருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல, ஸ்டீபனுக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறிய சரத்குமார் மற்றும் லிஸ்டின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மேல்முறையீடு செய்ய ஏதுவாக சரத்குமார் மற்றும் பங்குதாரர் லிஸ்டின் ஸ்டீபன் தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

நடிகை ராதிகாவுக்கு கொரோனா தொற்று - கைதாவதில் சிக்கல்! | Corona Infection Actress Radhika Problem Arrest

இந்த வழக்கு விசாரணையின் போது ராதிகா ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தால் ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தேர்தல் பிரச்சாரத்தில் கொரோனா பாதிப்பால் அவர் ஆஜராகவில்லையென ராதிகா தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.