அதிகரிக்கும் கொரோனா .. ஒரே நாளில் 6 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு : அதிர்ச்சியில் மத்திய அரசு
COVID-19
By Irumporai
இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தை தாண்டியுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது, நேற்று கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,335 பதிவான நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரசு அறிவிப்பு
கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டு வருவதால், மக்கள் அதிக கூடும் இடங்களில் முககவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.