ரசம் சாப்பிடுங்கள் கொரோனா ஓடி விடும் - ராஜேந்திர பாலஜி!

balaji corona india
By Jon Jan 12, 2021 02:40 PM GMT
Report

மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால், கொரோனா ஓடி ஒளிந்து விடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி பகுதியிலும் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இப்போது அமைந்திருக்கும் அம்மா மினி கிளினிக் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்து ஒரு கிளாஸ் குடித்தால் கொரோனா ஓடி ஒழிந்து, செத்து விடும்.

அதே போல்,சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை, எனவே சுக்குக்கு மிஞ்சிய மருந்து ஏதும் இல்லை என பழமொழி மூலம் விளக்கம் கொடுத்தார்.