இந்தியாவில் மீண்டும் கொரோனா.. மூன்றாம் கட்ட பரவல் அபாயகரமானதாக இருக்கும் - எச்சரிக்கும் விஞ்ஞானி
இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாவிட்டால் மூன்றாம் கட்ட பரவல் இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்றும் கொரோனா ஆபத்து இன்னும் முழுமையாக விலகவில்லை என சி.எஸ்.ஐ.ஆர் விஞ்ஞானி சேகர் எஸ். மண்டே தெரிவித்துள்ளார்.
இந்தியா ஜனவரி மாதமே கொரோனா தடுப்பூசி செலுத்த ஆரம்பித்துவிட்டாலும் மிகவும் மெதுவாகவே தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் பாதிப்புகள் மிகவும் மோசமாக இருக்கும் என சேகர் எஸ். மண்டே தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பூசி அனைத்து வகையான வைரசுக்கு எதிராகவும் வேலை செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.