மிரட்டும் கொரோனா! புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை? - வெளியான பரபரப்பு தகவல்

COVID-19 India
By Irumporai Dec 22, 2022 06:19 AM GMT
Report

சீனாவில் பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் மூன்றுபேருக்கு இந்த வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் டெல்லியில் இன்று மதியம் உயர்நிலை அதிகாரிகளிடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் மோடி.

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா

சீனா , ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது , சீனாவில் ஊரடங்கில் தளர்வினை கொண்டுவந்ததே கொரோனா தொற்று அதிகரிக்க முக்கிய காரணம் என்று சுகாதரா வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மிரட்டும் கொரோனா! புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை? - வெளியான பரபரப்பு தகவல் | Corona India Lockdown Plan New Year

புத்தாண்டு தடை

இந்த நிலையில் இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் , இதனால் மீண்டும் முகக்கவசம் அணிவது , விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்வது மீண்டும் கட்டாயமாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆகவே இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவலை அதிகரிக்காமல் தடுக்க உயர்நிலை குழுவுடன் ஆலோசனை நடத்துகின்றர் பிரதமர் மோடி இதனால் கிறிஸ்மஸ் ,புத்தாண்டு , பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் வரும் நிலையில் அதற்கு சில கட்டுப்பாடுகள் வரலாம் என கருதப்படுகின்றது.