சீனாவில் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா: அச்சத்தில் உலக நாடுகள்
சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
சீனாவில் அதிகரிக்கும் கொரோனா
உலகின் முதன் கொரோனா தொற்று சீனாவில் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் , தற்போது தடுப்பூசி மூலமாகவும் , பல பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாகவும் உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிகை அதிகரித்துள்ளது. சீனாவில் , கடந்த 24 மணி நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உயிரிழப்பு இல்லை
கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் சில நகரங்களில் 14,878 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் 13,167 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சத்தில் உலக நாடுகள்
ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது.
மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,71,968 ஆக அதிகரித்துள்ளது ,சர்வதேச அளவில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.