தமிழக பள்ளிகளில் அதிகரிக்கும் கொரோனா: இன்று முக்கிய ஆலோசனை
தமிழகத்தின் பள்ளிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்த நிலையில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புக்கான மாணவர்களுக்கு மட்டும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.
கடுமையான கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்ட போதுமம், விருப்பமான மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வாரத்தில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.
அதில், மாணவ, மாணவியருக்கு கோவிட் 19 தொற்று பரவியது எப்படி, அதைக் கட்டுப்படுத்த என்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பன குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டறிய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.