தமிழகத்தை மிரட்டும் கொரோனா : சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 30-ஆக அதிகரிப்பு

COVID-19 Tamil nadu
By Irumporai Apr 22, 2022 04:37 AM GMT
Report

சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கிண்டியிலுள்ள ஐஐடியில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 666 பேருக்கு பரிசோதனை செய்ததில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று சென்னை ஐஐடியில் மாணவர்கள் உள்பட 12 பேருக்கு தொற்று உறுதியானது என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.

தமிழகத்தை மிரட்டும் கொரோனா : சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 30-ஆக அதிகரிப்பு | Corona Increased To 30 At Iit Chennai

இந்த நிலையில் ,கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நேற்று 365 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதில் 12 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 666 பேருக்கு பரிசோதனை செய்ததில் 18 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 300ஆக அதிகரித்துள்ளது .

இந்த சூழ்நிலையில்,சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் பலர் வடமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மருத்துவத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.