70 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது : பிரதமர் மோடி
நாடு முழுவதும் 70 மாவட்டங்களில் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளதாக மோடி தகவல் அளித்துள்ளார். பொது மக்கள் அனைவரும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது என கூறினார்.
மேலும்,கொரோனா தடுப்பூசி பணியை விரைவுபடுத்துவது, கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கொரோனா வேகமாக பரவி வருகிறது. நகரங்களை போல், சிறு நகரங்களிலும் தினமும் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். 70 மாவட்டங்களில் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்து உள்ளது.அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும்.தடுப்பு மருந்துகள் வீணாவதை நாம் தடுக்க வேண்டும்.
இதற்காக சரியாக திட்டமிடுவதுடன், அதில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும். எந்த விலை கொடுத்தாவது தடுப்பு மருந்துகள் வீணாவதை தடுக்க வேண்டும். தடுப்பூசி போட்டு கொண்டாலும் கவனமாக இருத்தல் அவசியம், மாஸ்க் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்கொரோனாவை தடுப்பதற்கான வழிகளை மாநில அரசுகள் தெரிவிக்கலாம்.
கொரோனாவுக்கு எதிரான போரில், மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். கொரோனா மீண்டும் பரவுவதை தடுக்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்து கொரோனாவை தடுக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது. என மோடி ம் பேசினார்.